ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளரை எதிர்த்து கெஅடிலான் குணராஜ் போட்டி!

ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளரை எதிர்த்து கெஅடிலான் குணராஜ் போட்டி!

குணாளன் மணியம்

ஈஜோக், ஏப்ரல் 9-
         நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்று கூறிக் கொண்டிருக்கும் எதிர்கட்சிக் கூட்டணியின் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த ஜி்.குணராஜ் ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
            ஈஜோக் தொகுதியில் மஇகா சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ள வேளையில் கெஅடிலான் கட்சியின் செலாயாங் தொகுதித் துணைத் தலைவர் குணராஜ் போட்டியிடவிருப்பதாக எதிர்க்கட்சி தகவல் கசிந்துள்ளது.
         இந்த ஈஜோக் சட்டமன்றத் தொகுதி இரண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு மஇகா கோட்டையாக இருந்த து. ஆனால், 2008 பொதுத்தேர்தலில் ஏற்பட்ட ஒரு மாற்றம் மஇகாவின் பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி கள் கைமாறியது. அதில் ஒரு தொகுதிதான் ஈஜோக் சட்டமன்றம். இத்தொகுதி 27 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் பத்தாங் பெர்ஜுந்தை கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர்.
         இதில் சிலாங்கூர் மாநிலத்தில் முக்கியத் தொகுதியாக ஈஜோக் விளங்குகிறது. இத்தொகுதியில் எதிர்க்கட்சி சார்பில் குணராஜ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கெஅடிலான் கட்சியின் மற்றொரு வேட்பாளர் என்று கருதப்படும் ஒரு வழக்கறிஞராக இருக்கும் சிவமலர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அரசியலில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள குணராஜ் போட்டியிடுவதுதான் சிறப்பு என்று பரவலாக கூறப்பட்டு வருவதால் ஈஜோக் தொகுதியில் குணராஜ் மஇகா வேட்பாளரை எதிர்த்து போட்டியிடலாம் என்று தெரியவந்துள்ளது.

Comments