*பாகம் 1* புதிய தலைமைத்துவத்தை நோக்கி மஇகா! மாற்றம்தான் மாற்றத்தை கொண்டு வரும்! டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மஇகாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம்!

*பாகம் 1*
புதிய தலைமைத்துவத்தை நோக்கி மஇகா!
மாற்றம்தான் மாற்றத்தை கொண்டு வரும்!
டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மஇகாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம்!

எழுத்து : 
தேசம்  குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 25-
          மஇகா புதிய தலைமைத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தலைமைத்துவ மாற்றம் ஒரு கட்சியை வலுப்படுத்தும் என்பதால்தான் மஇகாவினர் மாற்றத்தை விரும்புகின்றனர்.
மாற்றம் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் புதிய தலைமைத்துவத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மஇகாவினருக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக புறப்பட்டிருக்கிறார் மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்.
        ஒரு கட்சிக்கு தலைமைத்துவம் மிகவும் முக்கியம்.
அந்த தலைமைத்துவம் எடுக்கும் முடிவு கட்சியின் தலையெழுத்தை முடிவு செய்யும்.
தலைமைத்துவம் சரியாக, முறையாக எடுக்கும் முடிவு கண்டிப்பாக அதன் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்பது தெளிவான உண்மை. ஆட்சியைப் புரட்டிப் போட்ட பொதுத்தேர்தல் முடிவு மக்கள் பலத்தை காட்டியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ள தேசிய முன்னனியில் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தோல்விக்குப் பொறுப்பேற்று டத்தோஸ்ரீ நஜிப் பதவி விலகி விட்டார். அந்த மனப்பான்மை மஇகா தலைமைத்துவத்திற்கும் வர வேண்டும். பொதுத் தேர்தலில் மஇகா சந்தித்த தோல்விக்குப் பொறுப்பேற்று அதன் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பதவி விலகியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் மஇகா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றார். இப்போது கட்சியை வலுப்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார். இப்போது கட்சியை வலுப்படுத்த போட்டியிடுவேன் என்று மறைமுகமாக மஇகா கூட்டங்களில் பேசி வருகிறார். கட்சியை புதிய தலைமைத்துவம் வழிநடத்தினால்தான் மாற்றங்களை செய்ய முடியும் என்று கிட்டத்தட்ட 85 விழுக்காடு தொகுதி, கிளைத் தலைவர்கள், அடிமட்ட உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக தேசம் வலைத்தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

டான்ஸ்ரீ எஸ்.ஏ.
விக்னேஷ்வரன் தலைமைத்துவத்தில் மஇகா பலம் எப்படி இருக்கும்?
டாக்டர் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா?

பாகம் 2...
நாளை தொடரும்....

Comments