துன் மகாதீர் 10 பேர் கொண்ட அமைச்சரவைக்கு தலையேற்றார்! 10 அமைச்சர்கள் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி!

துன் மகாதீர் 10 பேர் கொண்ட  அமைச்சரவைக்கு தலையேற்றார்!
10 அமைச்சர்கள் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 22-
         மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் முகமட் அவர்கள் முன்னிலையில் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் 10 பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவினர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
          டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா துணைப் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்களில் இருவர் இந்தியர்கள்.  இதில் ஜசெக கட்சியின் கோவிந்த் சிங் டியோ தகவல், தொடர்பு, பல்லூடக அமைச்சராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதேநேரத்தில் ஜசெக கட்சியின் மாண்புமிகு குலசேகரன் தலைப்பாகை அணிந்து பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மஇகாவின் முன்னாள் தலைவர் துன் சம்பந்தனுக்குப் பிறகு தலைப்பாகை அணிந்து மனிதவள அமைச்சராக  பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் குலசேகரன். மலேசிய இந்தியர் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்து விட்ட நிலையில் மேலும் சிலருக்கு அமைச்சர், துணையமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!

Comments