துன் மகாதீர் நாளை 10 அமைச்சர்கள் பட்டியலை அறிவிக்கிறார்! எதிர்ப்பார்ப்பில் இந்திய சமுதாயம்!

துன் மகாதீர் நாளை 10 அமைச்சர்கள் பட்டியலை அறிவிக்கிறார்!
எதிர்ப்பார்ப்பில் இந்திய சமுதாயம்!

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 12-
         நம்பிக்கை கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் துன் மகாதீர் முகமட் நாளை 10 அமைச்சர்களின் பட்டியலில் எத்தனை இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய சமுதாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
          தேசிய முன்னனி ஆட்சியில் ஒரு முழு அமைச்சரும் மூன்று துணையமைச்சர்களும் இருந்தார்கள். துன் மகாதீர் ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆகையால் இந்திய சமுதாயத்திற்காக 3 முழு அமைச்சர்களும் 3 துணையமைச்சர்களும் வழங்கப்பட்டால் இந்திய சமுதாயம் மனம் குளிர்ச்சி அடையும்.
தேசிய முன்னனி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்மறையாக அதேநேரத்தில் சரியாகவும் முறையாகவும் செய்ய நினைக்கும் துன் மகாதீர் அமைச்சரவை நியமனத்திலும் மாறுபட்ட வகையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய சமுதாயம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments