100 நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்! மக்களோடு விருந்தோம்பல் நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சூளுரை

100 நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!
மக்களோடு விருந்தோம்பல் நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சூளுரை

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்
படங்கள் : ஹரிஸ்ரீனிவாஸ்

கிள்ளான், மே 20-
         மக்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் வழங்கியுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக
நிறைவேற்றப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் மீண்டும் சூளுரைத்துள்ளார்.
          இந்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான வாக்குறுதியாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி ஜுன் முதல் நாள் முதல் அகற்றப்பட்டு சுழியம்
நிலைக் கொண்டு வரப்பட்டுள்ளதாக செந்தோசா மக்களோடு வெற்றிக் கொண்டாட்ட  விருந்தோம்பல் நிகழ்வில் உரையாற்றுகையில் குணராஜ் தெரிவித்தார்.
        மேலும் டோல் கட்டணம், பெட்ரோல் விலை, பிடிபிடிஎன் கல்விக் கடன், 1எம்டிபி விசாரணை உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று குணராஜ் சொன்னார்.
        இந்த விருந்து நிகழ்வில் குணராஜ் வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் குணராஜ் அவர்களுக்கு பலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
செந்தோசா தொழிலதிபர் டத்தோ சுப்ரா, தேசம் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் உள்ளிட்ட பலர் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பித்தனர்
.

Comments