மிஃபா அணி 3ஆம் இடத்தில் நிலைத்திருக்குமா? இன்று செவ்வாய்க்கிழமை பினாங்கு அணியுடன் பலப்பரீட்சை! சமுதாயத்தினர்களே திரளுங்கள்!

மிஃபா அணி 3ஆம் இடத்தில் நிலைத்திருக்குமா?
இன்று செவ்வாய்க்கிழமை பினாங்கு அணியுடன் பலப்பரீட்சை!
சமுதாயத்தினர்களே திரளுங்கள்!

கோலாலம்பூர், மே 22- 
      மலேசிய பிரிமியர் லீக்கில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து களம் இறங்கி தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மிஃபா அணி இன்றெ 22/05/18 செவ்வாய்க்கிழமை பினாங்கு அணியை எதிர்கொள்கிறது. நமது அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் நிலைத்திருக்கவும், 
மலேசியக்கிண்ணப்போட்டிகளுக்கு தகுதி பெறவும் வருகின்ற ஆட்டங்கள் மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த வகையில் இந்த ஆட்டத்தைக்காண சமுதாய பெருமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு மிஃபாவின்  தலைவர் செனட்டர்  டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
      இந்த ஆட்டம் நாளை இரவு 10 மணியளவில் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே அரங்கில் நடைபெறுகிறது. பினாங்கு அணியுடனான கடந்த ஆட்டத்தில் நமது அணி 2-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்த நிலையில் இந்த ஆட்டத்திலும் வெற்றியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     அணியின் மேலாளர் துவான் ஏ.எஸ்.பி ராஜன் , தலைமைப்பயிற்றுநர் கே.தேவன் ஆகியோரின் தலைமையில்  அணி நல்லதொரு அடைவு நிலையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது அணி பொருளாதாரத்தில் பின் தங்கிய அணியாக இருப்பினும் பலம் பொருந்திய, பொருளாதாரத்தில் நம்மை விட பல மடங்கு உயர்ந்த, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்ற அணியான பெல்டாவை நமது அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டமை  அனைவரிடத்திலும்  பாராட்டைப்பெற்றது.
அத்தகைய சூழலில் நமது அணியின் இந்த  ஆட்டத்தை கண்டு ரசிக்கவும், நமது வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணமும் நமது சமுதாயத்தினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

*நமது அணி! நமது கடமை! நமது வெற்றி!*

Comments