அடுத்த 5 ஆண்டுகள் இந்தியர் நலன் காக்கப்படும்!பிரகாஷ்ராவ் அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம்!

அடுத்த 5 ஆண்டுகள் இந்தியர் நலன் காக்கப்படும்!பிரகாஷ்ராவ் அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம்!

குணாளன் மணியம்
சுங்கை பூலோ மே 3-
        இந்திய மக்கள் நலன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரகாஷ்ராவ் அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
         கடந்த ஏப்ரல் 28இல் வேட்புமனு தீக்கல் செய்த து முதல் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரகாஷ்ராவ் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டிருந்தாலும் இந்திய மக்களுக்கான தமது சேவையை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
     ்அப்போதைய சுபாங் தொகுதி தற்போது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகுதி் மக்கள் பிரகாஷ்ராவ் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இத்தொகுதி நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு ஒன்றும் செய்யாத நிலையில் பிரகாஷ்ராவ் தோல்வி கண்ட போதிலும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
         சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு ப இ கா சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ந.முடியாண்டி வருகை மேற்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கேட்டறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments