அடுத்த 5 ஆண்டுகள் இந்தியர் நலன் காக்கப்படும்! டத்தோ ரவிச்சந்திரன் வாக்குறுதி! தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது!

அடுத்த 5 ஆண்டுகள் இந்தியர் நலன் காக்கப்படும்!
டத்தோ ரவிச்சந்திரன் வாக்குறுதி!
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது!

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ் மே 3-
        இந்திய மக்கள் நலன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காக்கப்படும் என்று சுங்கை துவா நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ரவிச்சந்திரன் சூளுரைத்துள்ளார்.
         கடந்த ஏப்ரல் 28இல் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டத்தோ ரவி காஜாங் ரவி எனும் பெயரில் பிரபலமானவர். 
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டிருந்தாலும் இந்திய மக்களுக்கான தமது சேவையை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
     அப்போதைய பத் துகேவ்ஸ் தொகுதி தற்போது சுங்கை துவா நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகுதி் மக்கள்  மீது நம்பிக்கை கொண்டு டத்தோ ரவி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
இத்தொகுதி நடப்பு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு ஒன்றும் செய்யாத நிலையில் இங்கு தோல்வி கண்ட போதிலும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார் டத்தோ ரவிச்சந்திரன்.

Comments