துன் மகாதீர் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்! நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

துன் மகாதீர் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்! நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10-
        பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. நம்பிக்கை கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று மாலை 5.00 மணிக்கு 7ஆவது பிரதமராக பேரரசர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளவிருக்கிறார்.
         இதுகுறித்த அறிவிப்பை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார். கெஅடிலான், ஜசெக, வாரிசான், பெரிபூமி ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டணியில் 135 நாடாளுமன்ற இடங்களுடன் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
         நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி அகற்றப்படும். மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று துன் டாக்டர் மகாதீர் உறுதியளித்தார்.

Comments