தினகரனின் சேவை, பாகான் டாலாம் மக்களுக்கு அவசியம் தேவை! வாக்காளர்கள் கருத்து

தினகரனின் சேவை, பாகான் டாலாம் மக்களுக்கு அவசியம் தேவை!
வாக்காளர்கள் கருத்து

பட்டர்வொர்த், மே 3-
மு.வ.கலைமணி
      பினாங்கில் ம.இ.காவினர் மட்டுமல்லாது,  அரசியல் பார்வையாளர்கள், பொது மக்கள், எதிர்க்கட்சியினர்கள் கூட மிகவும் உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு தொகுதி என்றால் அது பாகான் டாலாம் சட்டமன்றமாகும்.
     இச்சட்டமன்றத்தில் கடந்த  ஓர் ஆண்டுக்கு முன்னமே மக்களுக்காக தன்னலமற்ற சேவையை செய்ய தொடங்கி விட்டார்  ம.இ.காவின் நம்பிக்கை நட்சத்திர வேட்பாளர் தினகரன் ராஜகோபால்.
    எல்லோராலும் தினா என்றழைக்கப்படும் இவர் கால நேரம் பார்க்காமல் தனது சேவையை இங்குள்ள வாக்காளர்களுக்கு மட்டுமல்லாது பிற இன மக்களுக்கும் தொடர்ந்து வழங்கி வந்துக்கொண்டிருக்கின்றார்.
தனது சேவை மையத்திற்கு அருகிலெயே உணவகம்  தொடங்கி இலவச சேவை வழங்கி வருகின்றார்.
  இந்தியர், மலாய்காரர்கள் வாக்குகள் அமோகமாக தினகரனுக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கும் வேளையில் சீனர்கள் வாக்குகளை பெறும் வகையில் அவர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கு ஈடுகொடுக்கும் வகையில்  ம.சீ.ச, கெராக்கான் கட்சிகள் துணை நிற்பதாக அவர் கூறினார்.
      ம.இ.கா தொகுதி மற்றும் கிளைகளும் தொடர்ந்து ம.இ.காவின் வெற்றிக்கு பாடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், தான் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களுக்கு நிறைவான சேவையை திறந்த மனதுடன்  வழங்குவேன் என்று உறுதிக் கூறினார்.

Comments