இளைஞர்கள் மனதில் அரசியல் ஆர்வத்தை விதைக்கவே போட்டியிட்டேன்! இப்படியொரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை!

இளைஞர்கள் மனதில் அரசியல் ஆர்வத்தை விதைக்கவே போட்டியிட்டேன்!
இப்படியொரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10-
        இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வத்தை விதைக்கவே போட்டியிட்டேன். இப்படியொரு அதிர்ச்சியை ஏதிர்பார்க்கவே இல்லை என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் (வயது 22) கூறியுள்ளார்.

         எனக்கு அரசியல் ஆர்வம் உண்டு. வெற்றி பெறுவேன் என்பதற்காக போட்டியிடவில்லை. மாறாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவே போட்டியிட்டேன். அது இப்படியொரு மாபெரும் வெற்றுயைக் கொண்டு வரும் என்று நினைக்கவில்லை என்று பத்து தொகுதியில் கெஅடிலான் உதவித் தலைவர் தியான் சுவாவிற்கு பதிலாக போட்டியிட்ட மலேசியா மட்டுமன்றி உலகத்திலேயே இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பெற்றுள்ள பிரபாகரன் குறிப்பிட்டார்.
          பத்து நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு தவணைகள் போட்டியிட்டு வெற்றி கண்ட தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபாகரனுக்கு கெஅடிலான் தலைவர்கள் ஆதரவு தந்தனர்.
தியான் சுவா மீதான அனுதாப அலைகள் பிரபாகரனுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தது. பிரபாகரன் வெற்றிக்காக தியான் சுவா இரவும் பகலும் பாடுபட்டார்.
        இந்த மாபெரும் வெற்றியை முன் வைத்து மக்களுக்கு சேவையாற்றவுள்ளதாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments