மலேசிய இந்தியர்களுக்கு ஒரு புதிய தேசம் உருவாகி விட்டது! இது புதிய தொடக்கம்!இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்! பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்து!

மலேசிய இந்தியர்களுக்கு ஒரு புதிய தேசம் உருவாகி விட்டது!
இது புதிய தொடக்கம்!இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்து!

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 14-
        மலேசிய இந்தியர்களுக்கு ஒரு புதிய தேசம் உருவாக்கப்பட்டு விட்டதால் அதனை ஒரு புதிய தொடக்கமாக எண்ணி ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும் என்று பத்து தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பி்.பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
          நான் பத்து தொகுதியில் போட்டியிட்டது ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. ஆனால், அதில் ஒரு அதிசயம் நடந்து உங்கள் முன் நிற்கிறேன்.
உங்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று செந்தூல் தாமான் டத்தோ செனுவில் நடைபெற்ற  வெற்றிக் கொண்டாட்டத்தில் உரையாற்றுகையில் பிரபாகரன் கூறினார்.
          என் வயதுக்கு இதனை செய்ய முடியுமா என்று யோசித்தேன்.
ஆனால், தியான் சுவா வழங்கிய பேராதரவில் மக்களால் வெற்றி பெற்றேன்.
இதில் இந்திய மக்கள் வழங்கிய ஆதரவில் திளைத்துப் போய்விட்டேன். நமக்கு இது புதிய தொடக்கம்.
புதிய தேசம் உருவாக்கப்பட்டு விட்டது. நாம் ஒற்றுமையோடு செயல்பட்டால் இமயத்தையும் வெல்ல முடியும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
       இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சியில் இணையும் பாரத்தை பிரபாகரன் தியான் சுவாவிடம் வழங்கினார்.
        இந்த விருந்து நிகழ்வில் மக்கள் வெள்ளத்தில்  பிரபாகரன் திளைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments