கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினரானார்! சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!

கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினரானார்!
சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!

குணாளன் மணியம்

கிள்ளான், மே 15-
     கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கணபதிராவ் சிலாங்கூர் சுல்தான் ஷாரப்பூடின் முன்னிலையில் நேற்று இஸ்தானா ஆலாம் ஷா அரண்மனையில்  ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
         நாட்டில் ஒரு சுனாமியை ஏற்படுத்திய ஆட்சி மாற்றம் மக்கள் மத்தியில் பரவலான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக்குழுவில் மீண்டும் இடம் பிடித்துள்ள மாண்புமிகு கணபதிராவ் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவிருப்பதாக தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கணபதிராவ் தெரிவித்தார்.
        எனக்கு மக்கள்தான் முக்கியம். கடந்த 2007இல் நடைபெற்ற உண்மையான ஹிண்ட்ராப்தான் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இந்தியர்கள் ஏற்படுத்திய தீதான்  இன்றும் ஆட்சி மாற்றம் நிகழ வழிவகுத்துள்ளது. ஆகையால், இந்தியர்களுக்கான எனது சேவை என்றும் தொடரும் என்று கணபதிராவ் சொன்னார்.
         கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் கோலகுபுபாரு மாவட்ட மன்ற உறுப்பினர் ஸ்ரீவிக்னேஷ்வரன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தேசம் பத்திரிகை சார்பில் அதன் தோற்றுநர் குணாளன் மணியமும் வாழ்த்து தெரிவித்தார்.

Comments