சுங்கை பூலோவில் மக்கள் தேவைகளுக்கு உருமாற்ற மையம்!பிரகாஷ் அறிவிப்பு

சுங்கை பூலோவில் மக்கள் தேவைகளுக்கு உருமாற்ற மையம்!பிரகாஷ் அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 6-
     சுங்கை பூலோ தொகுதி மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கருத்தில் உருமாற்ற சேவை மையத்தை தொடங்கவிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தேசிய முன்னனி வேட்பாளர் பிரகாஷ்ராவ் வாக்குறுதியளித்துள்ளார்.
      நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத்தை சிவராசாவிடமிருந்து மீட்க நம்பிக்கை கொண்டுள்ள  பிரகாஷ்ராவ், தாம் வெற்றி பெற்றால் மக்களின் நலனை முன்னிறுத்தி உருமாற்ற சேவை மையத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
     இந்த சேவை மையத்தில் சுங்கை பூலோ மக்கள் கல்வி, நிதியுதவி, ஆபத்து அவசர உதவிகள் என்று தங்களின் தேவைகளை தெரிவிக்கலாம்.
         இத்தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக தாம் அத்திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாவும்  இம்மையம் பல சேவைகளை  ஒருங்கிணைக்கும் என்றும் பிரகாஷ்ராவ் சொன்னார்.
    இந்த  மையம்  இணைய சேவையையும் வழங்குவதால் மக்கள் தங்களின் புகார்களை  அல்லது கோரிக்கைகளை இணையம் வழியும் தெரிவிக்கலாம். இதில் இணையம் வழி கல்வி, இணையம் வழி சமூகச் சேவை, இணையம் வழி வர்த்தக உதவி போன்ற இலவச சேவைகளை வழங்கப்படவிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
     சுங்கை பூலோ கடந்த 10 வருடங்களாக பிகேஆர் வசம் இருந்தது. ஆனால், இங்குள்ள மக்களுக்கு பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. இம்முறை எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், சுங்கை பூலோ தொகுதியில் உருமாற்றத்தை நான் ஏற்படுத்தித் தருவேன் என்று தமது கொள்கையறிக்கையை வெளியிட்ட பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
     மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். மலாய்க்காரர்கள், இந்தியர்களின் ஆதரவை  பெற்றுள்ளேன். கடந்த பொதுத் தேர்தலில் நான் தோல்வி கண்டிருந்தாலும், மக்கள் சேவையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. ஆகையால், இங்குள்ள மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளதாக பிரகாஷ்ராவ் குறிப்பிட்டார்.

Comments