மக்களுக்கு அடிப்படை வசதி, கல்வி, சமூகவியல் ரீதியில் மேம்பாட்டுத் திட்டங்கள்! சிகாமாட் மாநகரின் உருமாற்றுத் தந்தை டாக்டர் சுப்பிரமணியம்!

மக்களுக்கு அடிப்படை வசதி, கல்வி, சமூகவியல் ரீதியில் மேம்பாட்டுத் திட்டங்கள்! சிகாமாட் மாநகரின் உருமாற்றுத் தந்தை டாக்டர் சுப்பிரமணியம்!

சிகாமாட்டிலிருந்து தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கிகாமாட், மே 8-
      மக்களின் தேவையறிந்து  அடிப்படை வசதி, கல்வி, சமூகவியல் ரீதியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ள டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிகாமாட் மாநகரின் உருமாற்றுத் தந்தை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
          சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த நாள்  முதல் இன்றுவரையில் சிகாமாட் நாடாளுமன்றத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளார்.
         அந்த வகையில் சிகாமாட்டில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுள்ளார். சிகாமாட் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு பல லட்சம் வெள்ளி செலவு செய்து ஆற்றை அகலப்படுத்தி வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டுள்ளார்.
         தங்காக் சிகாமாட்டிற்கு புதிய சாலை அமைத்துள்ளார். சுகாதார அமைச்சராக பதவியேற்றப் பிறகு சிகாமாட் மாவட்ட மருத்துவமனையை நிபுணத்துவ மருத்துவமனையாக உருமாற்றினார். 15 நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு நிபுணத்துவ மருத்துவமனையாக சிகாமாட் மருத்துவமனை திகழ்கிறது. கடந்த காலத்தில் மனிதள அமைச்சராக இருந்த போது தொழில்திறன் கல்லூரியை அமைத்துள்ளார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு மேம்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.
        இந்நிலையில் சிகாமாட் பொருளாதார மேம்பாட்டித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு, தொழில்முனைவர் வளர்ச்சித் திட்டம், தொழில்துறை ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் வேளாண்மை என்று கல்வி, சமூகவியல் என்றெ பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த செடாப் திட்டத்தின் கீழ் இரட்டைத் தண்டவாளத் திட்டத்தையும் கொண்டு வரவிருக்கிறார்.
இத்திட்டங்கள் அனைத்து சிகாமாட் மக்கள் மனதில் பதிந்துள்ளதால் அவலுக்கு சிகாமாட் மாநகர உருமாற்றுத் தந்தை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
         இந்த மக்கள் மேம்பாடுத் திட்டங்கள் அனைத்தும் சிகாமாட் நாடாளுமன்றத்தில் உருமாற்றுத் தந்தைக்கு மேம்பாட்டைக் கொண்டு வரும் என்பது திண்ணம்!

Comments