மஇகாவை இளைய தலைமுறைக்கு ஏற்ற கட்சியாக மாற்றுவேன்! கிளைத் தலைவர்கள், அடிமட்ட உறுப்பினர்களோடு அணுக்கமான உறவைக் கொண்டிருப்பேன்! தலைவர் பதவிக்கு போட்டியிடும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் உறுதிமொழி

மஇகாவை இளைய தலைமுறைக்கு ஏற்ற கட்சியாக மாற்றுவேன்!
கிளைத் தலைவர்கள், அடிமட்ட உறுப்பினர்களோடு அணுக்கமான உறவைக் கொண்டிருப்பேன்! தலைவர் பதவிக்கு போட்டியிடும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் உறுதிமொழி

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 19-
       மஇகாவை இளைஞர் சமுதாயத்திற்கு ஏற்ற கட்சியாகவும்  சமுதாயத்தின் நம்பிக்கையை பெறும் கட்சியாகவும் மாற்றியமைக்க  தலைவர் பதவிக்கு களமிறங்குவதாக அதன் தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அறிவித்துள்ளார்.   
        நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அதனை வலுவான கட்சியாக உருமாற்ற வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. ஊருக்கு உபதேசம் செய்த நாம் வீட்டில் உள்ளவர்களை கவனிக்கத் தவறி விட்டோம்.
மஇகா கிளைத் தலைவர்கள், உறுப்பினர்களை கவனித்திருந்தால் ஒரு வேளை நாம் மக்கள் நம்பிக்கையை இழந்திருக்க மாட்டோம் என்று மஇகா தலைமையகத்தில்நடைபெற்ற கூட்டத்தில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
        மஇகா பதவி ஒன்றுக்கு போட்டியிட நான் திட்டமிட்டிருந்தேன். தேர்தல் முடிந்து அறிவிக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.
ஆகையால், நான்  தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருப்பதாக மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ  விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
       மஇகா இனி செயல்பட வாய்ப்பே இல்லை என்று நினைக்கும் தரப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் களத்தில் இறங்கியுள்ளதாகவும் ம இ கா மக்கள் சேவையில் இருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை. ஆகையால் மக்கள் சேவையை நாங்கற் என்றும் தொடருவோம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.
         மஇகா கட்சித் தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு  போட்டியிடப் போவதில்லை என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உறுதிப்படுத்தியுள்ள வேளையில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.
        பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள மஇகாவுக்கு மற்றொரு இக்காட்டான நிலை எதிர்க்கட்சியாக செயல்படுவது. இத்தகைய சூழலில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, உருமாற்றத்தை நோக்கி பயணிக்க தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளதாக விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
       அந்தச் சவாலை டான்ஸ்ரீ  தாம் ஏற்றுக் கொண்டு இளைய தலைமுறையினருக்கு உகந்த கட்சியாகவும், சமூகத்தின் உரிமைகளை நிலை நாட்டுவதில் தனிச்சையாக இருந்து குரல் எழுப்பும் கட்சியாகவும் மஇகாவை உருமாற்ற எண்ணம் கொண்டுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
        டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமது அறிக்கை செய்த போது தொகுதி, கிளைத் தலைவர்கள் பிளவுபடாத ஆதரவைத் தெரிவித்தனர்.
        டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு கட்சித் தொண்டர்களின் ஆதரவு வலுத்து வருகின்றது.
கட்சியின் உருமாற்றம் , காலத்தின் அவசியம் என்று கூறுகின்ற டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தமது அரசியல் நகர்வில் மிகக் கவனமாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments