பிறை, கம்போங் மெயின் ரோட், குடியிருப்பாளர்களின் நிலப்பிரச்சனையை தீர்க்க பத்தாண்டு காலமா.? தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஜெயந்தி கேள்வி

பிறை, கம்போங் மெயின் ரோட்,  குடியிருப்பாளர்களின்  நிலப்பிரச்சனையை தீர்க்க பத்தாண்டு காலமா.?
தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஜெயந்தி கேள்வி

பிறை, மே 3-
மு.வ.கலைமணி
        கம்போங் மெயின் ரோட் குடியிருப்பாளர்களின் நிலப்பட்டா பிரச்சினைக்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி் ராமசாமியின் பதிலுரை ஏற்றுக்கொள்ள முடியாதது.
     இது போன்ற நிலப்பட்டா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட காலம் பிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காக பத்தாண்டு காலம் எடுத்துக்கொள்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளர் டத்தோ ஜெயந்தி தேவி கூறினார்.
        பிறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ராமசாமி நேற்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது நிலப்பட்டாக்களை பெற்றுத் தரும்
நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
     இதற்கு முன்னர் அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஒன்றுக் கூடியபோது
தங்களுக்கு வாக்களித்தது போல் ராமசாமி நடந்து கொள்ளத் தவறிவிட்டார் என கருத்துரைத்தனர்.
      ராமசாமியின் இயலாமையை இது காட்டுவதாக ஜெயந்தி  குறிப்பிட்டார்.
அந்நிலத்தில் குடியிருக்கும் அக்குடும்பங்கள் சொந்த நிலத்திலேயே ஒண்டிக்குடித்தனம
நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அக்குடியிருபபாளர்களுக்கு நிலப்பட்டாவை பெற்றுத் தருவதாக உறுதி கூறிய ராமசாமி அவ்வாறு ஏற்பாடு செய்யாமல் , அவர்களின் சொந்த நிலத்தை மேம்பாட்டு நிறுவனத்திற்கு விற்று, அவர்களை அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர்கள்  தெரிவித்தனர்.
இவை எலலாம் பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சி அரசாங்கம்,  மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
நான் பிறை கம்போ ரெயின் ரோட் மக்களை  சந்தித்து அவர்களின் நிலையை அறிந்து கவலை கொண்டேன்.
ஆதலால், இத்தேர்தலில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க உறுதி கூறுகிறேன்.
அப்பகுதி மக்களின் ஆதரவை எதிர்பார்த்து அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என அக்குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார்.
பிறை நகரில் மேம்படுத்தப்படாத பல பகுதிகளில் இந்த கம்போங் மெயின் ரோட்டும் என்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments