தல அஜித் பிறந்தநாள்! மலேசிய நற்பணி ரசிகர் மன்றம் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியது

தல அஜித்  பிறந்தநாள்! மலேசிய நற்பணி ரசிகர் மன்றம் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியது!

செமினி, மே 6-
         தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் தல அஜிட் பிறந்தநாள் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
          தல அஜித்தின் 47ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினரும் ரசிகர்களும் பல்வேறு சமூகநல திட்டங்களில் ஈடுபட்டு பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
        மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தினர் தல அஜிட்  பிறந்தநாளை செமினியிலுள்ள லோட்டஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பிள்ளைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர் மகிழ்ந்தனர்.
       தல அஜித்தின் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சமூகநல திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் ஆதரவற்றோர் இல்லங்களில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதும் அடங்கும் என்று மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் குறிப்பிட்டார்.
       நாங்கள் அவரது படங்களை மட்டும் இலக்காகக் இந்த மன்றத்தை நடத்தவில்லை. மாறாக, அவரது பெயரில் சமூகநல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவிகள், இளைஞர்களை ஒன்றுபடுத்த புட்சால் போட்டி இவ்வாறாக பல திட்டங்களை அடுக்கிக். கொண்டே போகலாம் என்றார் தேவேந்திரன்.
       தல அஜித் பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகளிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கக்கூடியவர்.
அதற்கு பின்னால், ஒரு காரணம் உள்ளது. அது மக்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதாகும். ஆயினும், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளில் நிச்சயமாக கலந்துக்க கொண்டு ஆதரவளிக்கக்கூடியவர. அவர் வழியில் அவரது ரசிகர்களாகிய நாங்களும் அவரை பின்பற்றி சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
அஜித் பிறந்தநாளில் இந்த இல்லத்திலுள்ள 30 பிள்ளைகளுக்கும் 20க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம்.
அவர்களுக்கு மதிய உணவும் பரிசுக் கூடைகளும் வழங்கினோம். தமிழ்நாட்டில் ஸ்டர்லைட் மற்றும் காவிரிக்காக மக்கள் போராடி வருவதால் நாங்கள் அஜித்தின் பிறந்தநாளை மிக எளிதான முறையில் இவர்களுடன் கொண்டாடினோம்.
எங்களுடன் மலேசிய ஏ.ஆர்.ரகுமான் ரசிகர் மன்றம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டதாக தேவேந்திரன் குறிப்பிட்டார்

Comments