"அம்மா தாயே ஓட்டு போடுங்க", ஐஞ்சு வருஷம் கொடுங்க" வைரலானார் டத்தோஸ்ரீ தேவமணி

"அம்மா தாயே ஓட்டு போடுங்க", ஐஞ்சு வருஷம் கொடுங்க" 
வைரலானார் டத்தோஸ்ரீ தேவமணி

சுங்கை சிப்புடிலிருந்து தேசம் செய்தியாளர்

சுங்கை சிப்புட், மே 6-
         நாட்டின் பொதுத் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் வேளையில் சமூகவலைத்தளங்களில் பலதரப்பட்ட தேர்தல் செய்திகள், காணொளிகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி பிரச்சார நிகழ்வு ஒன்றில் மக்களிடம் ஓட்டு கேட்ட விதம் பலரது முகத்தை சுளிக்கச் செய்துள்ளதாக தெரிகிறது. "அம்மா தாயே ஓட்டு போடுங்க, ஐஞ்சு வருஷம் கொடுங்க" என்று மக்களிடம் ஓட்டு கொண்டுள்ளார்.
இந்த காணொளி காட்சி படுவைரலாகி விட்டதாகவும் இப்படியா மக்களிடம் ஓட்டு கேட்பது என்று பலரும் கடுப்படைந்து விட்டதாக வும் தெரிகிறது.


தேவமணியின் இச்செயல் மஇகா தலைவர்களையும் முகம்  சுளிக்கச் செய்துள்ளதாக நம்ப ப்படுகிறது. என்ன நடக்கப் போகிறதோ!

Comments