செந்தோசா சட்டமன்றத்தில் கெஅடிலான் வேட்பாளர் குணராஜ் மகத்தான வெற்றி! மஇகா வேட்பாளர் டத்தோ ஆர்.எஸ்.மணியம் வைப்பு தொகை இழந்தார்.

செந்தோசா சட்டமன்றத்தில் கெஅடிலான் வேட்பாளர் குணராஜ் மகத்தான வெற்றி!
மஇகா வேட்பாளர் டத்தோ ஆர்.எஸ்.மணியம் வைப்பு தொகை இழந்தார்.

தேசம் செய்தியாளர்  குணாளன் மணியம்

கிள்ளான், மே 10-
       கிள்ளான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட  செந்தோசா சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட ஜி.குணராஜ் மக்கள்
ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
குணராஜ் அவர்களுக்கு 38,106 வாக்குகள் கிடைத்தன. இவர் 33,600 வாக்குகள் பெரும்பான்மையில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
         அரசியலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள குணராஜ் முதல் முறையாக செந்தோசா சட்டமன்றத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார். செந்தோசாவில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட குணராஜ் மக்கள் ஆதரவில் திளைத்து வெற்றி பெற்றார். குணராஜ் வட்டார மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிட்டார்.
        பக்காதான் ஹராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று குணராஜ் சூளுரைத்தார்.

Comments