சிறைச்சாலையில் இருந்து அரண்மனையை நோக்கி! அன்வார் விடுதலையை ஆனந்த கண்ணீரோடு வரவேற்ற மக்கள்!

சிறைச்சாலையில் இருந்து அரண்மனையை நோக்கி!
அன்வார் விடுதலையை ஆனந்த கண்ணீரோடு வரவேற்ற மக்கள்!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 17-
          வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்ட முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று விடுதலை செய்யப்பட்டதை மக்கள் ஆனந்த கண்ணீரோடு வரவேற்றனர்.
          டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாமன்னர் நிபந்நனையின்றி  பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து நேற்று காலை செராஸ் மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவரை
ஆதரவாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
           தமக்கு பொது மன்னிப்பு வழங்கிய மாமன்னரை மரியாதை நிமித்தம் சந்திக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்கு தமது துணைவியார் டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, அஸ்மின் அலியோடு விரைந்த டத்தோஸ்ரீ அன்வார் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மாமன்னரோடு பேசினார்.
அதன்பிறகு அங்கிருந்தி சிகாம்புட்டில் உள்ள தமது இல்லத்திற்கு சென்றார்.
அங்கு காத்திருத்த ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments