பொதுத் தேர்தலில் மஇகா தலைவரும் துணைத் தலைவரும் தோல்வியுற்றதன் எதிரொலி! கட்சியை ஆற்றல்மிக்க இளம்தலைமைத்துவம் வழிநடத்த தலைவர் வழிவிட வேண்டும்! செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் வேண்டுகோள்

பொதுத் தேர்தலில் மஇகா தலைவரும் துணைத் தலைவரும் தோல்வியுற்றதன் எதிரொலி!
கட்சியை ஆற்றல்மிக்க இளம்தலைமைத்துவம் வழிநடத்த தலைவர் வழிவிட வேண்டும்!
செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் வேண்டுகோள்

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 16-
        நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இருவரும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஆற்றல்மிக்க இளைய தலைமைத்துவம் கட்சியை வழி நடத்த அவர்கள் வழிவிட வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ எஸ். ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
         இத்தேர்தலில் மஇகா, தேசிய முன்னணி அடைந்த படுதோல்வி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் வரலாறு காணாத ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமானால் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஆற்றல்மிக்க தலைமைத்துவம் தேவை என்பதால் டாக்டர் சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இருவரும் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று டத்தோ ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.
        டாக்டர் சுப்பிரமணியம் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதால் தலைமைத்துவ மாற்றம் விரைந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் மஇகா அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். அதுவரையில் மஇகாவினர்  அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கெடா மாநில மஇகா துணைத் தலைவருமான செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் குறிப்பிட்டார்.

Comments