மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்! சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தல்

மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வலியுறுத்தல்

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கிள்ளான், மே 15-
            மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.
        மஇகா என்பது மக்கள் சொத்து. மக்களால் உருவாக்கப்பட்டது. அதில் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதா  என்பது கேள்விகுறியே. ஆகையால், மஇகாவில் என்னென்ன சொத்துக்கள் இருக்கிறது? அது யார் பெயரில் இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்ற பிறகு தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புச் செய்தியில் கணபதிராவ் சொன்னார்.
        நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மஇகாவின் நிலையென்ன? அதன் திட்டங்கள் தொடரப்படுமா என்று தேசம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஇகா, மைக்கா ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கணபதிராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments