மஇகாவின் வழி இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றியுள்ள டாக்டர் சுப்பிரமணியத்திற்கு தலை வசங்குகிறேன்! -டத்தோ ரவிச்சந்திரன்

மஇகாவின் வழி இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றியுள்ள டாக்டர் சுப்பிரமணியத்திற்கு தலை வசங்குகிறேன்!
-டத்தோ ரவிச்சந்திரன்

கோலாலம்பூர், மே 19-
     இந்திய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம் என்றும்,பொதுநலம் மிகுந்த அவரின் சேவைக்கு தாம் என்றும் தலைவணங்குவதாக டத்தோ ந.ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
      டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் நடவடிக்கைகளை  குறைத்து மதிப்பிடாத டத்தோ ரவிச்சந்திரன், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவிட்டுள்ள அவரின் பரந்த சிந்தனையை வரவேற்கும் அதே வேளையில், இதுவரை கட்சி நலனுக்காக அவர் ஆற்றியுள்ள சேவைகளுக்கு தமது பாராட்டுதலையும் நன்றியையும் பதிவு செய்தார்.
       மஇகா தேசியத் தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதில்லை என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.  கட்சித் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு தமது ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் முடிவை நான் மதிக்கிறேன். இதுவரை அவர் ஆற்றி வந்துள்ள சேவையை கட்சி என்றும் மறக்காது என்று டத்தோ ரவிச்சந்திரன் சொன்னார்.

Comments