பாகான் டாலாம் தொகுதியில் சேவை வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்! டத்தோ டி.மோகன் நம்பிக்கை

பாகான் டாலாம் தொகுதியில் சேவை வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்!
டத்தோ டி.மோகன் நம்பிக்கை

பாகான் டாலாம், 5- 
        பினாங்கு பாகான் டாலாம் தொகுதியில் களம் இறங்கியுள்ள மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன் தனது சேவையின் வழி அந்த பகுதி வாழ் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த பகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும் இவரின் சேவை இவருக்கு வெற்றியை தேடித்தரும் என மஇகாவின் உதவித்தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
      கெடா, பினாங்கு மாநிலங்களில் மஇகா போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் பாகான் டாலாம்  தொகுதியைப் பொறுத்தவரையில் ஜெ.தினகரன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அவரது சேவை இனம், மதம், மொழி கடந்து அனைவரிடத்திலும் அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
        வீடு வீடாக சென்று தினகரனுக்கு இவர் வாக்கு சேகரித்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
மேலும் அவர் கூறுகையில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிறைவேற்றப்படும்  வாக்குறுதிகளையும், எதிர்கட்சியினரின் வெற்று வாக்குறுதிகளையும் மக்கள் உணர்ந்துள்ளர்கள்.
அதன் அடிப்படையில் இந்தத்தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் வெற்றியை நிலை நிறுத்தும் என  அவர் குறிப்பிட்டார்.

Comments