பொதுத் தேர்தலில் மஇகா அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று டாக்டர் சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்! கட்சித் தலைமை பொறுப்பை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஏற்க வேண்டும்! சிவசுப்பிரமணியம் வலியுறுத்து

பொதுத் தேர்தலில் மஇகா அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று டாக்டர் சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்!
கட்சித் தலைமை பொறுப்பை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஏற்க வேண்டும்!
சிவசுப்பிரமணியம் வலியுறுத்து

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 13-
          நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா அடைந்துள்ள படுதோல்விக்கு பொறுப்பேற்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும் என்று மஇகாவின் சிவசுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
         டாக்டர் சுப்பிரமணியம் பொதுத் தேர்தலில் பல தவறுகள் செய்துள்ளார். இதில் தகுதியற்ற வேட்பாளர்களை தேர்வு செய்தது முக்கிய தவறாக கருதப்படுகிறது என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.
          இந்தத் தேர்தலில் சிப்பாங் குணா, பார்த்திபன், தினாளன், டத்தோ ரவி, டத்தோ ஜஸ்பால், டத்தோ பன்னீர்செல்வம், தங்கராஜ், தங்கராணி, துரைசிங்கம், டத்தோ வி. இளங்கோ, டத்தோ எஸ்.கண்ணன், சுரேஷ், டத்தோ குணசேகரன், டத்தோ ஆர்.எஸ்.மணியம், டத்தோ மோகனா முனியாண்டி, டத்தோ வி.எஸ்.மோகன், ஜே.தினகரன், டத்தோ கமலநாதன், டத்தோஸ்ரீ எஷ்.கே.தேவமணி என்று தவறான, வேண்டிய வேட்பாளர்களை டாக்டர் சுப்பிரமணியம் போட்டியிட செய்துள்ளார்.
இதனால் ம இ கா வரலாறு காணாத தோல்வியடைந்தது. மஇகா மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
பழி வாங்கும் படலம் மட்டுமே தொடர்ந்தது. டாக்டர் சுப்பிரமணியம் தற்போதைய சூழலை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
தன்மூப்பாக செயல்பட்டு கட்சியை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதால் அதற்கு பொறுப்பேற்று டாக்டர் சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும். டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
          அதேநேரத்தில் மஇகாவை யாராலும் அழிக்க முடியாது. பலவீனங்களை சரி செய்து எதிர்கட்சியாக இருந்து செயலாற்றும் என்று சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.Comments