அந்நிய தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தால் எங்கள் வீடுகள் வெள்ளக்காடாக மாற வேண்டுமா? ஜூரு மக்கள் போர்க்கொடி.

அந்நிய தொழிலாளர்களுக்கான  வீடமைப்பு திட்டத்தால் எங்கள் வீடுகள் வெள்ளக்காடாக மாற வேண்டுமா?
ஜூரு மக்கள் போர்க்கொடி.

மு.வ.கலைமணி

செபராங் பிறை, ஜூரு, மே 6-
          பினாங்கு மாநில அரசின் மெத்தனப்போக்கு காரணமாக  இங்கு தாமான் செந்தூல் ஜாயா குடியிருப்பு  மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
          கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நான்கு அடியிலிருந்து ஐந்து அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டதால், ஒரு வாரக்காலம் நாங்கள் பெரும் அவதிப்பட்டு, பல ஆயிரம் வெள்ளிக்கான உடமைகளை இழந்து இன்று வரை பரிதவிக்கும் நிலையில் வாழ்க்கையை ஒரு வித அச்சத்தோடு நடத்திவரும் வேளையில், அருகிலுள்ள தரிசு நிலத்தில் மாநில அரசு மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டு பணியால் எங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக தாமான் செந்துல் மக்கள் அச்சம்கொள்வதாக  எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துக் கொண்ட இந்திய மக்கள் கூறினர்.
      மழை வந்தாலே அச்சம் ஏற்படுகின்ற வேளையில் வெள்ளம் ஏற்படாதிருக்க  மாற்றுவழியை ஏற்படுத்தாத வரை இங்கு மேம்பாட்டுப் பணிகள் நடத்தக்கூடாது என அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர்.
       இங்கு பிறந்து, வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராத நிலையில் மாநில அரசு அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கு மட்டும் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றிட துடிப்பது ஏன் என்று பாதிக்கப்பட்ட மக்களான அகிலன், வீரையா, இளவேந்திரன் ஆகியோர் வினவினர்.
   மக்கள் படும்  அவதியை அறியாது மேலும் மேலும் கஷ்டத்தை தரும் இந்த அரசின் போக்கை கண்டிக்கிறோம் என  நவநிதம், சித்ரா, சரஸ்வதி மற்றும் பலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
     இக்கோரிக்கையை மாநில அரசு ஏற்று அந்த மேம்பாட்டுப் பணியை உடனடியாக
நிறுத்தும்படி ஏற்கனவே பல சீன இயங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.Comments