டத்தோஸ்ரீ அன்வார் விடுதலை! துன் மகாதீர் ஜனநாயகம் தழைக்கச் செய்துள்ளார்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் பாராட்டு!

டத்தோஸ்ரீ அன்வார் விடுதலை!
துன் மகாதீர் ஜனநாயகம் தழைக்கச் செய்துள்ளார்!
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் பாராட்டு!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 17-
        சிறையில் வாழ்க்கையை கழித்து விட்ட முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை விடுதலை செய்ய மாமன்னரிடம் மன்னிப்பு கோரிக்கையை முன் வைத்து ஜனநாயகத்தை தழைக்கச் செய்துள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பாராட்டுக்குரியவர் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் குறிப்பிட்டுள்ளார்.
           அன்வாரை விடுவிக்க துன் மகாதீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஆனால், அவருக்கு நிபந்தனையின்றி பொது மன்னிப்பு வழங்கி  எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த மாமன்னருக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்று அன்வார்  சிறையில் இருந்து வெளியேறியது குறித்து தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் மாண்புமிகு குணராஜ் தெரிவித்தார்.
          நாட்டில் ஜனநாயத்தை உறுதி செய்ய மக்கள் 60 ஆண்டுகள் இருந்த ஆட்சியை மாற்றினார்கள். இந்நிலையில் பல ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் அன்வாரை விடுவிக்க மாமன்னருக்கு கோரிக்கை விடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இறுதியில் அன்வார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
         டத்தோஸ்ரீ அன்வார் விடுதலைக்கு அடித்தளம் அமைத்த துன் மகாதீர், பொது மன்னிப்பு வழங்கிய மாமன்னர், வழக்கறிஞர்கள் என்று அனைவருக்கும் குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு அன்வார் விடுதலையை பெரிதும் வரவேற்பதாக கூறினார்.

Comments