வீட்டை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்படும்! சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்!

வீட்டை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்படும்!
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கிள்ளான், மே 20-
        செந்தோசா, தாமான் சமாரா இண்டாவில் ஏற்பட்ட தீயில் வீடுகளை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு தற்காலிக மாற்று வீடுகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கூறினார்.
         கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த தீயில் வீடுகளை இழந்த குடும்பங்களை நேரில் சந்தித்த குணராஜ் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தற்காலிகமாக அடிப்படை உதவிகளை வழங்கினார்.
        பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு விரைவில் வீடுகளை ஏற்படும் செய்து தரவிருப்பதாக குணராஜ் குறிப்பிட்டார்.

Comments