மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளிப் பயணம்!

மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளிப் பயணம்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 6-
          நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இழந்த தொகுதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
         தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை பிரதிநிதித்து லண்டனில் நடைபெற்ற ஷோகம் மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நாடு திரும்பிய கையோடு மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
        கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்
பினாங்கு, கெடா, பேரா, ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா என்று தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
        இந்தத் தேர்தலில் மஇகா இழந்தத் தொகுதிகளை மீட்கும். அதேநேரத்தில் தேசிய முன்னனி
மகத்தான வெற்றி பெறும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Comments