துன் மகாதீர் பேரரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்! அரண்மனை நுழைவாயில் அருகே ஆதரவாளர்கள் திரண்டனர்!

துன் மகாதீர் பேரரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்!
அரண்மனை நுழைவாயில் அருகே ஆதரவாளர்கள் திரண்டனர்!

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10-
        நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று  வரலாறு படைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தலைமையேற்று துன் டாக்டர் மகாதீர் முகமட் பேரரசர் முன்னிலையில் சற்று முன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.     
         60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த  நம்பிக்கை கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட் நாட்டின் 7ஆவது பிரதமராக பேரரசர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளார்.
         மலேசியாவின் பிரதமராக 22 ஆண்டுகள் பதவி வகித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 60 ஆண்டுகள்  ஆட்சியில் இருந்த தேசிய முன்னனியை வீழ்த்தி ஆட்சி  மாற்றத்தை செய்து மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டார் துன் டாக்டர் மகாதீர் முகமட். மக்கள் மாற்றத்தை விரும்பியதன் காரணமாகவே இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
        கெஅடிலான், ஜசெக, வாரிசான், பெரிபூமி ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டணியில் 135 நாடாளுமன்ற இடங்களுடன் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments