அலட்சியம் காரணமாகவே கமலநாதன், தேவமணி தோல்வி கண்டனர்! மக்கள் கருத்து

அலட்சியம் காரணமாகவே கமலநாதன், தேவமணி தோல்வி கண்டனர்!
மக்கள் கருத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 10
          அலட்சியம் காரணமாகவே டத்தோ கமலநாதன், டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி  தோல்வி கண்டுள்ளதாக மக்கள் கருத்துரைத்துள்ளனர்.
          கமலநாதன் இந்திய மக்களை குறிப்பாக மாணவர்களை அலட்சியப்படுத்தி விட்டார். அவர்களின் பிரச்சினைகளை கவனிக்கத் தவறி விட்டார். மக்களின் கைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல மாட்டார். தமக்கு வேண்டியவர்களுக்கு எல்லாம் செய்து விடுவார் என்று மக்கள் கருத்துரைத்தனர்.
         டத்தோஸ்ரீ தேவமணியும் மக்களை பொருட்படுத்தவில்லை.தலைவா..தலைவா என்று லாவகமாக பேசுவார். ஆனால், மக்களை பொருட்படுத்தவில்லை. இவரும் தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் வழங்குவார். மக்கள் மீதான இவர்களின் அலட்சியமே இவர்களுக்கு தோல்வியைத் தேடி தந்துள்ளதாக இந்திய மக்கள் கருத்துரைத்துள்ளனர்.

Comments