அடுத்த தலைமைக்கு வழிவிடுங்கள்! கேவியஸ் கட்சி சட்டத்திற்கு உட்பட்டுதான் நீக்கப்பட்டுள்ளார்! சத்யா சுதாகரன் அறிக்கை

அடுத்த தலைமைக்கு வழிவிடுங்கள்! கேவியஸ் கட்சி சட்டத்திற்கு உட்பட்டுதான்   நீக்கப்பட்டுள்ளார்!
சத்யா சுதாகரன் அறிக்கை

கோலாலம்பூர், மே 8-
         டான்ஸ்ரீ கேவியஸ் கட்சி சட்டத்திற்கு உட்பட்டுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் சத்யா சுதாகரன் கூறியுள்ளார்.
            கேவியஸ் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது.  கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தீவிர விசாரணைக்குப் பிறகு கட்சியின் சட்டத்திற்கு உட்பட்டு உச்சமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு உச்சமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் டான்ஸ்ரீ கேவியஸ் நீக்கப்பட்டுள்ளார் என்று சத்யா தெரிவித்தார்.
        கேவியஸ் வெறுமென நீக்கம் செய்யப்படவில்லை. கட்சி சட்டத்திற்கு உட்பட்டுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அவர் உணர வேண்டும். கட்சின் எல்லா பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துவிட்டு இப்போது மட்டும் கட்சி சட்டத்திற்கு புறம்பாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று என்று சத்யா குறிப்பிட்டுள்ளார்.
          கட்சியில் 25 ஆண்டுகள் தலைவராக இருந்தது போதும். கேவியஸ் அடுத்த தலைமைக்கு வழிவிட வேண்டும். இதற்கு ஓர் உதாரணம் துன் சாமிவேலு. அவர் அடுத்த தலைமைக்கு வழிவிட்டுச் சென்றுள்ளார். கேவியஸ் கட்சித் தலைவர் என்று சொல்லி தம்மை களங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
          மைபிபிபிக்கு கட்சிக்கு கிடைத்த சிகாம்புட்டில் நாடாளுமன்ற வாய்ப்பையும் கேவியஸ் வேண்டாம் என்று சொல்லி கட்சி வாய்ப்பை இழக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆகையால், கேவியஸ் கட்சியில் இருந்து போவதுதான் நல்லது. நாங்கள் இளைஞர் பிரிவு டத்தோஸ்ரீ மெக்லீன் டிக்குருஸ் அவர்களுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்குகுறோம். அவர் கட்சியில் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்பதோடு தேசிய முன்னனி பங்காளி கட்சிகளுடன் நல்ல அணுக்கமான உறவை கொண்டிருப்பார் என்று சத்யா சுதாகரன் குறிப்பிட்டார்.

Comments