செந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை

செந்தோசாவில் குப்பை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அதிரடி நடவடிக்கை

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கிள்ளான், மே 16-
         செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் கூறியுள்ளார்.
         செந்தோசாவின் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
ஆகையால், குப்பை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண கிள்ளான் மாநகராண்மைக்கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பணிக்கப்படும் என்று செந்தோசா சுற்று வட்டாரத்தில்  உள்ள சில குப்பைகள் போடப்பட்டுள்ள இடங்களை நேரடியாக சுற்றி பார்த்த போது தேசம் வலைத்தளத்திடம் அவ்வாறு சொன்னார்.
         செந்தோசா வட்டாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இப்பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும்.
தெருவிளக்கு பிரச்சினை, சாலை பிரச்சினை, குப்பை பிரச்சினை, கால்வாய் பிரச்சினை என்று பல பிரச்சினைகளுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்படும் என்று குணராஜ் குறிப்பிட்டார்.

Comments