பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு நன்றி கூறினார்

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு நன்றி கூறினார்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

பத்துகாஜா, மே 11-
          பத்துகாஜா நாடாளுமன்றத்தில் மகத்தான வெற்றி பெற்ற மாண்புமிகு வி.சிவகுமார் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
        பத்துகாஜா நாடாளுமன்றத்தில் மூன்றாவது தவணையாக போட்டியிட்ட சிவகுமார் 43 ஆயிரத்து 868 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
         பத்துகாஜா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சிவகுமார் பத்துகாஜாவில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மக்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். இந்நிலையில் சிவகுமார் 43 ஆயிரத்து 868 வாக்குவித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

        "எனக்கு ஆதரவு வழங்கி வாக்களித்து வெற்றி பெற்றச் செய்த மக்களுக்கு உள்ளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Comments