புக்கிட் செலம்பாவ் தொகுதியை மீட்டெடுப்போம்! ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் டத்தோ டி.மோகன் வேண்டுகோள்

புக்கிட் செலம்பாவ் தொகுதியை மீட்டெடுப்போம்!
ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்
டத்தோ டி.மோகன் வேண்டுகோள்

லூனாஸ், மே 8-
        கடந்த 10 ஆண்டுகாலமாக எதிர்கட்சி வசம் இருந்து வரும் புக்கிட்செலம்பாவ் தொகுதியை மீட்டெடுத்து இந்த பகுதியியில் மேம்பாட்டினை உருவாக்க மஇகாவின் வேட்பாளர் டத்தோ ஜஸ்பால் சிங்கிற்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள், தேசிய முன்னணியை வெற்றி பெறச்செய்யுங்கள் என கெடா, பினாங்கு மாநிலங்களில் சூறாவளி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மஇகாவின் உதவித்தலைவர் செனட்டர்  டத்தோ டி.மோகன் புக்கிட்செலம்பாவ் பகுதி மக்களிடத்தில்  வேண்டுகோள் விடுத்தார்.
      இந்த தொகுதியில் போட்டியிடும் மஇகாவிவின் உதவித்தலைவர்களில் ஒருவரான டத்தோ ஜஸ்பால் சிங் ஓர் நல்ல மனிதர் மட்டுமல்ல சிறந்த தலைவரும் ஆவார். இவரால் இந்த பகுதியில் மேம்பாட்டினை உருவாக்க முடியும். அதோடு மட்டுமில்லாது இந்திய சமுதாய மக்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றார் அவர்.
நமது சமுதாயத்தை சார்ந்த ஒருவரை தேர்வு செய்தால் நம்மால் அவரிடம் உரிமையோடு கேள்வி எழுப்பலாம். அத்தகைய சூழலில் இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.
மஇகா தவறிழைக்கவில்லை என்று சொல்லவில்லை. தெரியாமல் நடந்த தவறுகளுக்கு   தண்டனையாக 10 வருடம் தண்டித்து விட்டீர்கள் இந்த முறை  வாய்ப்பளித்து, வாக்களித்து   உங்களுக்கு சேவையாற்ற டத்தோ ஜஸ்பால் சிங்கை வெற்றி பெறச்செய்யுங்கள் என டத்தோ டி.மோகன் கேட்டுக்கொண்டார்.

Comments