செந்தோசா சட்டமன்றத்தில் கெஅடிலான் வேட்பாளர் குணராஜுவுக்கு ஆதரவு பெருகுகிறது!

செந்தோசா சட்டமன்றத்தில் கெஅடிலான் வேட்பாளர் குணராஜுவுக்கு ஆதரவு பெருகுகிறது!

தேசம் செய்தியாளர்    
      ஜீவானந்தன்

கிள்ளான், மே 7-
       கிள்ளான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட  செந்தோசா சட்டமன்றத்திற்கு போட்டியிடும் ஜி.குணராஜுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
          அரசியலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள குணராஜ் முதல் முறையாக செந்தோசா சட்டமன்றத்தில் போட்டியிடுகிறார்.
செந்தோசாவில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் குணராஜ் மக்கள் ஆதரவில் திளைத்து வருகிறார்.
இங்கு போட்டியிடும் மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் குணராஜுக்கு வட்டார மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிடும் குணராஜ் செந்தோசா சட்டமன்றத்தில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக வட்டார மக்கள் கருத்துரைத்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் அண்டலாஸ் என்றழைக்கப்பட்ட இத்தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments