டத்தோஸ்ரீ அன்வாருக்கு முழுமையாக மன்னிப்பு வழங்க பேரரசர் ஒப்புதல்! துன் மகாதீர் தகவல்

டத்தோஸ்ரீ அன்வாருக்கு முழுமையாக மன்னிப்பு வழங்க பேரரசர் ஒப்புதல்!
துன் மகாதீர் தகவல்

தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 11-
       சிறையில் பல ஆண்டுகள் தண்டணை அனுபவித்து விட்ட முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையான மன்னிப்பு வழங்க மாட்சிமை தங்கிய பேரரசர் துங்கு முகமட் ஃபாரிஸ் ஒப்புதல் வழங்கியிருப்பதாக  நேற்று அவரை சந்தித்த துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
         பேரரசர் மன்னிப்பு வழங்கிய பிறகு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்.
அதன்பிறகு அவரது நிலைகுறித்து முடிவு செய்யப்படும். அன்வாரை  துணைப் பிரதமராக கொண்டு வருவதற்கான சட்டதிட்டங்களும் ஆராயப்படும்.
அன்வார் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வர வேண்டுமானால் அதை செய்வது குறித்தும் ஆராயப்படும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

Comments