பிரதமர் மட்டுமே நிதியமைச்சராக இருக்கும் நிலையை துன் மகாதீர் மாற்றியமைத்தார்! லிம் குவான் எங் நிதியமைச்சர்

பிரதமர் மட்டுமே நிதியமைச்சராக இருக்கும் நிலையை துன் மகாதீர் மாற்றியமைத்தார்!
லிம் குவான் எங் நிதியமைச்சர்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 12-
           நாட்டின் பிரதமர் மட்டுமே நிதியமைச்சராக இருக்க முடியும் என்ற நிலையை துன் மகாதீர் மாற்றியமைத்து ஜசெக கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங்கை நிதியமைச்சராக நியமைத்து வரலாறு படைத்தார்.
         தேசிய முன்னனியின் கொள்கையை முற்றாக அகற்றிய விட்ட துன் மகாதீர் மக்கள் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.
           பெட்டாலிங் ஜெயா யாயாசான் சிலாங்கூர் கட்டடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மூன்று முக்கிய அமைச்சுக்களின் பெயர்களை துன் மகாதீர் அறிவித்தார்.
நிதியமைச்சராக லிம் குவான் எங் நியமிக்கப்பட்டார். தற்காப்பு அமைச்சராக மாட் ஷாபுவும் உள்துறை அமைச்சராக டான்ஸ்ரீ மொகிதீயாசினும் நியமிக்கப்படுவதாகவும் மற்ற அமைச்சர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முழுமையான அமைச்சரவை இரண்டு முதல் மூன்று வார காலத்திற்குள் அமைக்கப்படும் என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.

Comments