அண்டலாஸ் சட்டமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறந்த சேவை வழங்கியுள்ளார்! கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்!

அண்டலாஸ் சட்டமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறந்த சேவை வழங்கியுள்ளார்!
கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்!


தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜுன் 7--
       அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகள் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியுள்ள கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
       கெஅடிலான் கட்சியின் வழி மக்கள் நலனுக்கு குறிப்பாக இந்தியர்களின் நலனுக்காக 10 ஆண்டுகள் அண்டலாஸ் சட்டமன்றத்தில் சிறந்த சேவையாற்றி வந்துள்ள டாக்டர் சேவியர் ஜெயகுமார்  கோல லங்காட் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். ஆகையால் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த அமைச்சர் பதவி சேவியருக்கு உரிய அங்கீகாரமாகும் என்று  இந்திய சமுதாயம் வலியுறுத்தியுள்ளது.
        டாக்டர் சேவியர் ஜெயகுமார் அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். மக்கள் சேவையில் பாராட்டுப் பெற்றவர்.  இந்திய மக்கள் மட்டுமன்றி மலாய், சீன சமூக மக்களின் ஆதரவையும் பெற்றுள்ள சேவியர் ஜெயகுமார் அமைச்சராக நியமிக்கப்படுவதின் வழி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்பதால் அவருக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அமைச்சர்  பதவியை டாக்டர் சேவியருக்கு வழங்க வேண்டும். இதனால்  மக்களின் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை பெற முடியும் என்று இந்திய சமுதாய மக்கள் நம்புகின்றனர். 
      நாட்டில் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு இந்திய சமுதாய மக்களும் ஒரு காரணம். மக்கள் மாற்றத்தை விரும்பினர். இந்தியர்கள் அதற்கு செவி சாய்த்து நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments