பாகம் 6....புதிய தலைமைத்துவத்தை நோக்கி மஇகா! மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனை முழுமையாக ஆதரிக்கிறோம்! மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் மனம் திறக்கின்றனர்

பாகம் 6....புதிய தலைமைத்துவத்தை நோக்கி மஇகா!
மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனை முழுமையாக ஆதரிக்கிறோம்!
மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் மனம் திறக்கின்றனர்

எழுத்து : தேசம் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜுன் 3-
          மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் ஆற்றல்மிக்கத் தலைவர் என்பதால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க தாங்கள் தயாராகி வருவதாக மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் பலர் கூறியுள்ளனர்.
            தற்போதைய காலகட்டத்தில் கட்சியை வழிநடத்த தைரியம் இருக்க வேண்டும்.
டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு அந்த தைரியம் பன்மடங்கு இருப்பதால் அவருக்கு தாங்கள் முழுமையான ஆதரவை வழங்கவிருப்பதாக நெகிரி செம்பிலான் மாநில துணைத் தலைவரும் தம்பின் தொகுதித் தலைவருமான டத்தோ ராஜேந்திரன் தெரிவித்தார்.
        மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதால் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு எங்களின் முழுமையான ஆதரவை வழங்குகிறோம். கட்சித் தலைமைக்கு பொருத்தமானவர்.
தைரியசாலி. அரசியலில் அனுபவம் கொண்டவர். கட்சியை வழி நடத்துவதற்கு பொருத்தமான, ஆற்றல்மிக்கத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் என்பதால் அவரை ஆதரிப்போம் என்று டத்தோ ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
             மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் வழிவிட்டு விட்டதால் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனை முழுமையாக ஆதரிக்கிறோம். அவர் ஒருவரால் மட்டும்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும். மஇகாவை அவரது சிந்தனையில் நல்ல முறையில் வழி நடத்த முடியும் என்று கோலபிலா தொகுதித் தலைவரும் நெகிரி செம்பிலான் மாநில பொருளாளருமான காளிதாஸ் கூறினார்.
          தற்போதைய காலகட்டத்தில் மஇகாவுக்கு நல்ல தலைமைத்துவம் தேவை. எதிர்த்துப் கேள்வி கேட்கக்கூடிய தலைமைத்துவம் இருந்தால் மட்டுமே ம இ காவை வலுப்படுத்த முடியும். அதேநேரத்தில் பொருமையும் இருக்க  வேண்டும். இவை இரண்டும் பொருந்திய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் இருப்பதால் மஇகாவை திறம்பட வழி நடத்த முடியும். ஆகையால், ஆற்றல்மிக்கத் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கவிருப்பதாக டத்தோ காளிதாஸ் சொன்னார்.
        டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ம இ கா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்த போது மஇகா, நேதாஜி மண்டபம் நிறைந்து தொகுதி கிளைத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
       இதில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மஇகா தலைமைக்கு சரியான தலைவர் என்பதை வலியுறுத்தி ஆதரவு தெரிவித்தவர்கள் பலர். இதில்டீன்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை ஆதரிப்பதாக  செலாயாங் தொகுதித் தலைவர எம்.பி.ராஜா, கோல சிலாங்கூர் தொகுதித் தலைவர் டத்தோ முனியாண்டி, டத்தோ அசோஜன், டத்தோ ஜஸ்பால், டத்தோ ஆனந்தன், டத்தோ இளங்கோ, டத்தோ கணேசன் என்று பல தொகுதி, கிளைத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
            மஇகா கிளை, தொகுதி, அடிமட்ட உறுப்பினர்கள் என்று பலரும் ஆதரவு தருவதால் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தயக்கமின்றி போட்டியிடலாம் என்றும் கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார் என்றும் மஇகாவினர் கருத்து தெரிவித்தனர்.

Comments