இந்தியர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்! ஒற்றுமை திருநாளாக நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வாழ்த்து

இந்தியர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்! 
ஒற்றுமை திருநாளாக நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன்  வாழ்த்து

தேசம் குணாளன் மணியம்

 சுங்கை சிப்புட், ஜுன் 15-
          இந்தியர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். நாம் மதத்தால் வேறுபட்டிருதாலும் ஒற்றுமை உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். ஒற்றுமைத் திருநாளாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம் என்று வாழ்த்துச் செய்தியில்  மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
          இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டும். ஒற்றுமையை பேண வேண்டும். இத்தகைய பெருநாட்கள் வழி ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
          நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  அரசாங்கம் மாறியிருந்தாலும் இந்தியர்கள் தங்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசாங்கம் இந்தியர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். புதிய அரசாங்கம் இந்தியர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
      இந்த நோன்புப் பெருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, ஒற்றுமையுடன் கொண்டாட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் உளப்பூர்வமான நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments