மனிதவள அமைச்சர் குலசேகரன் தடம் மாறுகிறாரா? தடுமாறுகிறாரா? நம்பிக்கை கூட்டணி இலக்கு எதை நோக்கி போகிறது? வாக்களித்த மக்கள் பரவலாக அதிருப்தி

மனிதவள அமைச்சர் குலசேகரன் தடம் மாறுகிறாரா?
தடுமாறுகிறாரா?
நம்பிக்கை கூட்டணி இலக்கு எதை நோக்கி போகிறது?
வாக்களித்த மக்கள் பரவலாக அதிருப்தி

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜுன் 30-
        நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது கண்டு மக்கள் பரவசமடைந்த வேளையில் ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த நம்பிக்கை கூட்டணி பங்காளி கட்சிகளுக்கு அவப்பெயரை தேடித்தந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பரவலாக குற்றச்சாட்டியுள்ளனர்.
            நாட்டின் ஆட்சியைப் கைப்பற்ற துன் மகாதீர் போட்ட உழைப்பு அதிகம். ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டவர் துன் மகாதீர் என்பதை மக்கள் அறிவார்கள்.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன்  தமது அமைச்சில் தேசிய முன்னணி ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கைக்கு குலசேகரன் என்ன காரணம் சொன்னாலும் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், வே.இளஞ்செழியன் உள்ளிட்ட பலரை எச்ஆர்டிஎஃப் எனப்படும் மனிதவள மேம்பாட்டு வாரிய உறுப்பினர் குழுவில் இணைத்துக் கொண்டது சரியில்லை என்று வாட்ஸ்ஆப் குரல் பதிவில் மக்கள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதற்கான ஆதாரமும் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
          தேசிய முன்னனி ஆட்சியில் இருந்த போது மாண்புமிகு குலசேகரன் எதிர்கட்சி அணியில் இருந்து கொண்டு தேசிய முன்னனி அரசாங்கத்தை சரமாரியாக கேள்விகள் கேட்டிருந்தார்.

ஆனால், தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்கள் கூட்டணி கட்சிக்கு முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்த போது 3 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை என்றார். ஆனால், தனியார் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை இல்லை என்றார்.  அப்படியானால் 2 லட்சத்து 70 ஆயிரம் அடையாள அட்டை பிரச்சினைக்கு மஇகா தான் தீர்வு கொண்டுள்ளது என்பதை குலசேகரன் சொல்லாமல் சொல்லி விட்டார்.
           இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு தளர்வு வழங்கப்படலாம் என்றும் கூறியிருந்தார். இப்படி கூறிய குலசேகரன் இந்நாட்டில் பிறந்த மியான்மார், வங்காளதேசிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதுதான் நியாயம் என்று மியான்மார், வங்காளதேசிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.  அப்படியானால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதற்காக 60 இந்தியர்களுக்கு தளர்வு வழங்கப்படும் என்கிறாரா குலசேகரன்?
          உணவகங்களில் வெளிநாட்டவர்கள் சமையல் செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் அதுவொரு பரிந்துரை என்றார். இப்படி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த மாண்புமிகு குலசேகரன் தேசிய முன்னனிக்கு ஆதரவாக இருந்து பிரதமர் துன் மகாதீரை படுகேவலமாக விமர்சித்த டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், இளஞ்செழியன் போன்றவர்களை மனிதவள மேம்பாடு வாரிய குழுவில் இணைத்துள்ளது ஏன் என்று தேசம் வலைத்தளத்திடம் மக்கள் கேள்வி எழுப்பினர்.   
         கோலங்காட்டில் போட்டியிட்ட டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஒரு கிறித்தவர். அவரை வெற்றி பெறச் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு வேலைகள் செய்ததாக நம்பப்படும் இளஞ்செழியனையும் அக்குழுவில் இணைத்துள்ளதாக தெரிகிறது. இளஞ்செழியன் அப்படியென்ன அதிமேதாவியா? நம்பிக்கை கூட்டணியில் வேறு அறிவாளிகள் இல்லையா? சாதாரண மக்கள் எத்தனையோ பேர் அதிபுத்திசாலியாக இருக்கிறார்கள். அவர்களை ஏன் நியமிக்கவில்லை? தேசிய முன்னனியில் இருந்தவர்கள் தங்கள் வேலையைக் காப்பாற்றி கொள்ள உதவியுள்ள குலசேகரன் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பியுள்ளனர்.
       துன் மகாதீரை சாடிப் பேசியர் எப்படி குலசேகரனுக்கு நண்பரானார்? முன்னாள் துணையமைச்சர் டத்தோ கமலநாதனோடு இருந்த இளஞ்செழியனும் குலாவுக்கு நண்பராகி வீட்டார். நம்பிக்கை கூட்டணியில் தகுதி வாய்ந்தவர்கள் இல்லையா? தேசிய முன்னனியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தகுதியானவர்களா? நம்பிக்கை கூட்டணி வழங்கிய வாக்குறுதிகளை குலசேகரன் தவிடுபொடியாக்கி வருவதாகவும் இதற்குத்தான் நாங்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தோமா என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.
            இந்த விவகாரம் தொடர்பில் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களும் தமிழ் மலர் நாளேட்டில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். மை ஸ்கில்ஸ், தமிழ் அறவாரியம் ஆகிய அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகிக்கும் வழக்கறிஞர் பசுபதியும் இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ஓம்ஸ் தியாகராஜன் தமிழ் மலரில் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments