மஇகா தலைத்துவ தேர்தல்! தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம்! டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு நெகிரி மஇகா முழுமையான ஆதரவு!

மஇகா தலைத்துவ தேர்தல்!
தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம்!
டான்ஸ்ரீ விக்னேஷ்வரனுக்கு நெகிரி மஇகா  முழுமையான ஆதரவு!

தேசம் குணாளன் மணியம்

சிரம்பான், ஜுன் 12-   
       மஇகா தேசியத் தலைவருக்கு போட்டியிடவிருக்கும் அதன்  தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களுக்கு நெகிரி செம்பிலான் மஇகா முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
            மஇகா தேசியத் தலைவருக்கு போட்டி இருக்கக் கூடாது. நாங்கள் போட்டியை விரும்பவில்லை.
டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற்ற தொகுதி, கிளைத் தலைவர்களுடனான சந்திப்பின் போது நெகிரி மஇகா அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.   
பலவீனமாக்கப்பட்டிருக்கும் மஇகாவை உருமாற்றம் கொண்டு இந்திய சமுதாயத்தின் நம்பிக்கைகுரிய துடிப்புமிக்க கட்சியாக கொண்டு வருவதற்குரிய எல்லா ஆற்றலும், திறமையும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரனுக்கு இருக்கிறது. கட்சியின் முன்னோடி போராட்டவாதியாக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறார்.
கட்சிக்கும் சமூகத்திற்கெம் போராடியதே தனது அரசியல் வாழ்க்கையாக க் கொண்டிருக்கும் விக்னேஷ்வரன் மஇகாவை திறம்பட வழி நடத்துவார் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
         "இந்திய சமுதாயம், மஇகா மற்றும் தேசிய முன்னனியின் எல்லா நிலையான போராட்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
மஇகா இளைஞர் பகுதி காலகட்டத்தில் கிளை, தொகுதி, மாநிலம், என்று தேசிய இளைஞர் பகுதிக்கு எல்லா நிலையிலும் அங்கீகாரத்தை கொண்டு வந்தவர்.
இளைஞர்கள் கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டு பதவிகளை அலங்கரிக்க வழிவகுத்து இளைஞர்களுக்கு அரணாக இருந்து வந்துள்ள டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ம இ கா தலைமைத்துவத்திற்கு ஆலமரமாக இருந்து செயல்படுவார் என்று நெகிரி செம்பிலான் மஇகா கிளைத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
           மஇகாவிற்கு ஆற்றிய சேவை அடிப்படையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நெகிரி மஇகா வலியுறுத்தியது.

Comments