இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டும்! சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் நோன்பு பெருநாள் வாழ்த்து

இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டும்!
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் நோன்பு பெருநாள் வாழ்த்து

தேசம் குணாளன் மணியம்

 சுங்கை சிப்புட், ஜுன் 14-
          இந்திய இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
          நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு இந்திய இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும். நாட்டில் இருக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும். இதன்வழி பொருளாதாரத்தில் வலுப்பெற முடியும் என்று கேசவன் கூறினார்.
        நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இளைஞர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்திய இளைஞர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்திய சமுதாய மக்கள் நலனுக்காக இந்திய இளைஞர்கள் புத்தாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டும். "பழைய குருதி கதவை திறடி" என்பது போல குண்டர் கும்பல், மதுபானம், சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்ள வேண்டாம் என்று  கேசவன் வலியுறுத்தினார்.
            இந்த நோன்புப் பெருநாளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கேசவன். இந்திய முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments