சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி! பொருத்தமான தேர்வு

சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி!
பொருத்தமான தேர்வு

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜுன் 28-
           நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கோல லங்காட் தொகுதி யில் வெற்றி பெற்றுள்ள டாக்டர் சேவியர் ஜெயகுமாருக்கு அமைச்சர் பதவி பொருத்தமான தேர்வு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
           கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகள் கிள்ளான், அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி கண்டு சேவையாற்றி வரும் சேவியர் ஜெயகுமார் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அண்டலாஸ் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தன்னலமற்ற சேவை வழங்கியவர். இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் கோல லங்காட் தொகுதி யில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ள டாக்டர் சேவியருக்கு அமைச்சர் பதவி வழங்க ப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் சேவியருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
           டாக்டர் சேவியர் ஜெயகுமார் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர். டாக்டர் சேவியர்  இப்பதவியின் வழி  மக்கள் சேவையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments