மஇகாவின் 10ஆவது தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்வு! கிளைத் தலைவர்கள் மகிழ்ச்சி

மஇகாவின் 10ஆவது தேசியத்  தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்வு!
கிளைத் தலைவர்கள் மகிழ்ச்சி

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர் ஜூலை 14-
         மஇகாவின் 10ஆவது தேசியத் தலைவராக அதன் உதவித் தலைவர்

டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் போட்டியின் தேர்வு பெற்றுள்ளார்.


           மஇகாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேடுத்துச் செல்லும் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் உருவாக்குவார் என்று நாடு தழுவிய நிலையில் கிளைத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


     மஇகா  தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூலை 14 சனிக்கிழமை மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் 1,808 வேட்புமனுவுடன் ஏகமனதாக தேர்வு பெற்றார். மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது பதவியை தற்காத்துக் கொள்ளவில்லை என்ற நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் 10ஆவது தலைவராக போட்டியிட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments