வங்காளதேசிகள், மியான்மார்வாசிகள், பிலிப்பினோக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன் இந்திய இளைஞர்களுக்கு வழங்குங்கள்! மாண்புமிகு குலசேகரனுக்கு டத்தோ சம்பந்தன் வலியுறுத்து!

வங்காளதேசிகள், மியான்மார்வாசிகள், பிலிப்பினோக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன் இந்திய இளைஞர்களுக்கு வழங்குங்கள்!
மாண்புமிகு குலசேகரனுக்கு டத்தோ சம்பந்தன் வலியுறுத்து!

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 2-
          நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் குடியேறிய வங்காளதேசிகள், மியான்மார்வாசிகள், பிலிப்பினோக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன் இந்நாட்டில் அடையாள அட்டை இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இந்திய இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்க மனிதவள அமைச்சர் குலசேகரன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் வலியுறுத்தினார்.
          வெளிநாட்டவர்கள் இங்கு பிறந்நவர்கள்  என்பதற்காக அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். இந்நாட்டில் பிறந்த இந்தியர்களுக்கு குறிப்பாக 60 வயதை கடந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க தளர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இங்கு பிறந்த வங்காளதேசிகள், மியான்மார்வாசிகள், பிலிப்பினோக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம். அரசாங்க கொள்கையில் அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று ராகா தனியார் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் குலசேகரன் கூறியிருந்தார். இது ஏன்? முதலில் அடையாள அட்டை இல்லாத இந்திய இளைஞர்கள் பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள். அடையாள அட்டை இல்லாத பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தி்ருமணம் செய்யவும் முடியவில்லை. இதுகுறித்து மனிதவள அமைச்சர் குலசேகரன்  நடவடிக்கை முன்வர வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
            இந்தியர்களுக்கு குறிப்பாக 60 வயதை கடந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்தான். ஆனால், அதற்கு முன் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அடையாள அட்டை வழங்குங்கள். இது மிகவும் அவசரம். அதைவிடுத்து வெளிநாட்டவர்களுக்கு அடையாள அட்டை அவசியமில்ல என்றார் டத்தோ சம்பந்தன்.
           இந்நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருப்பதற்கு அடையாள அட்டை பிரச்சினைதான் காரணம். ஆனால்,
இந்நாட்டில் சமூகசீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முனைப்பு காட்டுகிறார் குலசேகரன். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற வேண்டும் என்றால் இளைஞர்களின் அடையாள அட்டை பிரச்சினைக்கு குலசேகரன் தீர்வு காண வேண்டும் என்று டத்தோ எம்.சம்பந்தன் கேட்டு கொண்டார்.

Comments