ஜாகுவார் இந்தியா குளியல் அறை விற்பனை மையத்தை பெட்டாலிங் ஜெயாவில் தொடங்கினார் டத்தோ ஹக்கிம்! மிம் கோய்ன் தலைவர் டத்தோ சைட் ஜமாருல் கான், அயூப் கான் நேரில் வாழ்த்து

ஜாகுவார் இந்தியா குளியல் அறை விற்பனை மையத்தை பெட்டாலிங் ஜெயாவில் தொடங்கினார் டத்தோ ஹக்கிம்!
மிம் கோய்ன் தலைவர் டத்தோ சைட் ஜமாருல் கான், அயூப் கான் நேரில் வாழ்த்து

தேசம் குணாளன் மணியம்


பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23-
          மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரின் பாரம்பரியம் இல்லாத, சவால்மிக்க துறைகளில் இந்திய இளைஞர்கள் குறிப்பாக இந்திய முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று இத்துறையில் புதிகாக  ஈடுபட்டுள்ள டத்தோ ஹக்கிம் வலியுறுத்தியுள்ளார்.


       வீட்டு குளியல் அறைக்குத் தேவையான  பொருட்கள் விற்பனை துறையில் துணிந்து இறங்கியுள்ள  டத்தோ ஹக்கிம், இத்துறையில் இளைஞர்களும்  ஈடுபாடு காட்டி வெற்றிநடை போட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயாவில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு எதிர்புறம் ஜாகுவார் வெல்ட் குளியல் அறை விற்பனை மைய திறப்பு விழாவில் தேசம் வலைத்தளத்திடம் அவர் அவ்வாறு சொன்னார்.


            இந்த துறை இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு புதிய துறை. இந்திய முஸ்லிம்கள் பெரும்பாலும் ஜவுளி, உணவுத் துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இந்தத் துறையில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும் டத்தோ ஹக்கிம் கேட்டுக் கொண்டார்.           இந்த ஜாகுவார் வெல்ட் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுள் ஒன்றாகும். ஜாகுவார் இந்தியா, புருணை உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் துபாயில் உள்ளது. வீட்டுக் குளியலறைக்குத் தேவையான எல்லா பொருட்களும் நியாயமான விலையில் இங்கு கிடைக்கும். மலேசியர்களும் இதுபோன்ற தரமான பொருட்களை தங்கள் வீடுகளுக்கு வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்துறையில் இறங்கியுள்ளேன். ஜாகுவார் என்றதும் அதிகமான விலை என்று மக்கள் எண்ண வேண்டாம். மக்கள் வாங்கக்கூடிய அளவில்தான் பொருட்களின் விலை இருக்கும். இங்கு குளியல் தொட்டி, தண்ணீர் தொட்டி, சிங்கி, பூக்குளியல் குழாய் உள்ளிட்ட பல குளியல் அறை  பொருட்கள் கிடைக்கும். மக்கள் தாராளமாக வந்து பார்த்து வாங்கலாம் என்றார் டத்தோ ஹக்கிம்.

            மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரின்  பாரம்பரியம் அல்லாத, சவால்மிக்க துறையான குளியலறை பொருட்கள் விற்பனை துறையில் தைரியமாக கால்பதித்துள்ள டத்தோ ஹக்கிம்மிற்கு மிம் கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் சம்மேளனத் தலைவர்  டத்தோ சைட் ஜமாருல் கான் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
         இந்த ஜாகுவார் இந்தியாவின் முதல் கிளை நிறுவனமாக இது திகழ்கிறது. இந்த திறப்பு விழாவில் மிம் கோயின் உள்ளிட்ட பல வர்த்தகர்கள் நேரடியாக கலந்து கொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்புக்கு
 03-7932 5501 No.8. Jalan University, Section 11, Petaling Jeya
 42000 Petaling Jeya, Selangor.
www.awinco-jaguar.com
www.jaguar.com

Comments