ஹிண்ட்ராப் வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி உறுதி! இன்று செவ்வாய்கிழமை மாமன்னர் முன்னிலையில் பதவி பிரமாணம்!

ஹிண்ட்ராப் வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி உறுதி!
இன்று செவ்வாய்கிழமை மாமன்னர் முன்னிலையில் பதவி பிரமாணம்!

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 17-
        ஹிண்ட்ராப் போராட்டாவாதிகளில் ஒருவரான வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது. வேதமூர்த்தி இன்று ஜூலை 17 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் மாமன்னர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
           வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் ஒரு சில தரப்பினர் அவருக்கு அப்பதவி வழங்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாமன்னர் அவருக்கு செனட்டர் பதவிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.
          இந்நிலையில் வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது. சிறுபான்மை இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிக்க வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தேசம் வலைத்தளத்திற்கு தெரியவந்துள்ளது. வேதமூர்த்தி அரண்மனையில் இன்று ஜூலை 17 மாலை 3.00 மணிக்கு மாமன்னர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று தேசம் வலைத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
         கடந்த 2013 பொதுத் தேர்தலில் பிரதமர் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்ட வேதமூர்த்தி அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி  இந்தியர் பிரச்சினைகளை கவனிக்கவில்லை என்பதால் ஓராண்டுகூட ஆகாத நிலையில் துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments